XtGem Forum catalog
தமிழ்கிங் தமிழ்கிங்
சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)
சிந்துவெளி மற்றும் அரப்பாவில் ”கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
tamilmp3world.mobie.in©2011-2015